உடம்பு சும்மா இருந்தாலும், உள்ளே இருக்குற நரம்பு சும்மா இருக்காது: ரஜினி வெளியிட்ட யோகிபாபு படத்தின் டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

பழம்பெரும் இயக்குனர் விசி குகநாதன் கதையில் உருவான ’காவி ஆவி நடுவுல தேவி’ என்ற திரைப்படத்தின் டிரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் விசி குகநாதன் கதையில் உருவாகும் திரைப்படம் ’காவி ஆவி நடுவுல தேவி’. இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் தமிழ்மணி. அமன், பிரியங்கா, ரித்திகா, யோகி பாபு, தம்பி ராமையா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

கணேஷ் ஒளிப்பதிவில் ராஜ் கீர்த்தி படத்தொகுப்பில் உருவாக்கிய இந்த படத்தின் டிரைலர் முழுக்க முழுக்க காமெடி அம்சமாக உள்ளது. ஏவிஎம் சித்ரமாலா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் காமெடி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழம்பெரும் இயக்குனர் விசி குகநாதன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தனிக்காட்டு ராஜா’ உட்பட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். அது மட்டும் இன்றி ஏராளமான படங்களுக்கு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவாஜி கணேசன் நடித்த ’ராஜபார்ட் ரங்கதுரை’ உள்பட ஒரு சில படங்களையும் அவர் தயாரித்துள்ளார்

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விசி குகநாதன் கதையில் உருவாகியுள்ள ‘காவி ஆவி நடுவுல தேவி’ படம் ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.