விஜய்யை அடுத்து அரசியலுக்கு வரும் விஷால்.. ரஜினியின் ரியாக்சன்..!

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தார் என்பதும் அவரது அரசியல் வருகை குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் ’வாழ்த்துக்கள்’ என்று கூறியதையும் பார்த்தோம். இந்த நிலையில் விஜய்யை அடுத்து விஷாலும் அரசியலுக்கு வர உள்ள நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் கூறிய கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் களம் என்பது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகினரை சார்ந்தே இருந்து உள்ளது. அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், தற்போது விஜய் என திரை உலகை சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஷாலும் அரசியல் வருகை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ‘விஷால் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு ’நோ பாலிடிக்ஸ், அரசியல் குறித்த கேள்வி கேட்க வேண்டாம்’ என்று தவிர்த்து விட்டார்.

மேலும் ’வேட்டையன்’ படம் குறித்து அவர் கூறியபோது 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் இன்னும் 20 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் இந்த படம் முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More News

எதிர்காலத்தை மாத்துற சக்தி உன் ஒருத்திக்கு மட்டும் தான் இருக்கு: 'மேடம் வெப்' புரமோ வீடியோ

ஹாலிவுட்டில் தயாரான 'மேடம் வெப்' என்ற திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட ஒரு த்ரில்  படமாகும். பிப்ரவரி 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்த படம் தமிழிலும் தமிழகத்தில் வெளியாக

'காக்கா - கழுகு' விவகாரத்தை அப்படியே விட்ருக்கலாம், ரஜினி தப்பு செய்திட்டார்: பிரபல இசையமைப்பாளர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த 'லால் சலாம்' இசை வெளியீட்டு விழாவில் தான் பேசிய காக்கா கழுகு கதையில் காக்கா என்பதை விஜய்யை வைத்து நான் சொன்னதாக அனைவரு

கட்சி தொடங்கி ஒரே வாரத்தில் ஒரு விக்கெட் காலி.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்..!

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகி திமுகவில் சேர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும்

இயக்குனர் விஷ்ணுவர்தன் .. செம்ம அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..!

தமிழ் திரை உலகின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும் அது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத

'எல்.ஐ.சி' படத்தில் கேரக்டரை மாற்றிய விக்னேஷ் சிவன்.. தர்மசங்கடத்தில் சீமான்?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'எல்.ஐ.சி' என்ற திரைப்படத்தில் சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது