ரஜினியுடன் இணைந்த பிரபல விமான நிறுவனம்

  • IndiaGlitz, [Friday,June 10 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஏர்லைன் பார்ட்னராக பிரபல விமான நிறுவனமான ஏர் ஆசியா இணைந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ஏர் ஆசியா நிறுவனத்தின் விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
'அட்டக்கத்தி' பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More News

அச்சம் என்பது மடமையடா' டிராக்லிஸ்ட் வெளியீடு

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்...

'உறியடி'யை மீண்டும் ரிலீஸ் செய்ய இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்

சமீபத்தில் வெளிவந்த 'உறியடி' திரைப்படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளிவந்தாலும் விமர்சகர்கள் தந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் நல்ல ரிசல்ட்டை தந்தது. கடந்த மே 27ஆம் தேதி வெளியான இந்த படம் ஒருசில நாட்களில் சில திரையரங்குகளில் காட்சிகள் அதிகரித்தும் சில திரையரங்க வளாகத்தில் பெரிய திரையரங்குகளிலும் திரையிடப்பட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' பர்ஸ்ட்லுக் வெளியாவது எப்போது? புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான '2.0' படத்திற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மேக்கப் டெஸ்ட் செய்துள்ளார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' ஆடியோ ரிலீஸ் தேதி

சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் சிம்புவும் அவரது ரசிகர்களும் உற்சாகமாக இருக்கும்

பேரறிவாளன் விடுதலைக்காக களமிறங்கும் கோலிவுட்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட ஏழுபேர்களை விடுதலை செய்ய, வரும் 21ஆம் தேதி வேலூர் சிறைச்சாலை முதல் சென்னை கோட்டை வரை பிரமாண்டமான பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.