மகிழ்ச்சி. கபாலியின் முதல் நாள் சாதனை வசூல்

  • IndiaGlitz, [Saturday,July 23 2016]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியாகி வசூலில் பலவித சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நேற்றைய வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னையில் 26 திரையரங்க வளாகங்களில் வெளியான இந்த படம் 287 காட்சிகள் ஓடி சுமார் ரூ.1 கோடியே 12 லட்சம் வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படம் ரூ.21.5 கோடி வசூல் செய்துள்ளது.
அதேபோல் ஆந்திராவில் ரூ.13.85 கோடியும், வட இந்தியாவில் ரூ.4.5 கோடியும், அமெரிக்காவில் ரூ.18 கோடியும், பிரிட்டனில் ரூ.2 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.12 கோடியும், சிங்கப்பூரில் ரூ.2.5 கோடியும் வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்னும் ஒருசில நாடுகளின் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் வரவேண்டியதுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் முதல்நாளின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.