'கபாலி'யின் சீன ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,August 06 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் புதிய வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் இந்த படம்தான் 'மலாய்' மொழியில் டப் செய்யப்பட்டு வெளியான முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மலாய் பதிப்பு 'கபாலி' வரும் 26ஆம் தேதி முதல் தாய்லாந்து, இந்தோனேஷியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி பதிப்புகளின் வசூல் மட்டுமே ரூ.500 கோடியை நெருங்கியுள்ள நிலையில் மலாய் பதிப்பும் தற்போது மூன்று நாடுகளில் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இசை, நடிப்பை அடுத்து கிரிக்கெட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருவதோடு, தற்போது வெற்றிகரமான ஹீரோவாகவும் உருவாகியுள்ளவர் ஜி.வி.பிரகாஷ்.

'சாமி'க்கும் 'சாமி 2'க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான்!!

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக 'இருமுகன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய்-அமலாபால் இணைந்து எடுத்த முக்கிய முடிவு

கடந்த சில நாட்களாக இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஆகிய இருவரும் விவகாரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து இயக்குனர் விஜய் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் செல்வராகவன் நாயகி

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரெஜினா, தற்போது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம்.