'கபாலி' கிளைமாக்ஸ் திடீர் மாற்றமா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,July 23 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதியில் வரும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டு வந்தது.
குறிப்பாக ரஜினியை மிகவும் நேசிக்கும் மலேசிய ரசிகர்கள் இந்த முடிவை விரும்பவில்லை என்று செய்திகள் வெளியானதை அடுத்து மலேசிய திரையரங்குகளில் இந்த படத்தின் முடிவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், முடிவை ஒரே ஒரு வரியில் தோன்றும் வார்த்தைகள் மூலம் விளக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் முடிவில் மாற்றம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே இந்த படத்தின் முடிவை ரஜினியின் மகள் செளந்தர்யாவும், தயாரிப்பாளர் தாணுவும் இயக்குனர் ரஞ்சித்திடம் மாற்றும்படி கூறியதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.