'ஜெயிலர் 2' படத்தை மறைமுகமாக உறுதி செய்த ரஜினியின் பி.ஆர்.ஓ.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 'ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பது குறித்த செய்திகள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில் இன்று நெல்சன் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ரஜினியின் பிஆர்ஓ தனது சமூக வலைத்தளத்தில் நெல்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிளாக்பஸ்டர் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் கதை சொல்லும் திறன் மற்றும் படைப்பாற்றல் எங்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியதோடு, எங்களை உத்வேகமாகவும் வைத்திருக்கிறது. நீங்கள் உருவாக்கும் படங்களைப் போலவே இந்த ஆண்டு நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள். மேலும் இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்துகளிலிருந்து 'ஜெயிலர் 2’ திரைப்படம் மறைமுகமாக உறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது . ஏற்கனவே 'ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதையை நெல்சன் எழுதி வருவதாக கூறப்படும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy Birthday! Our blockbuster director @Nelsondilpkumar Sir. Your talent for storytelling & creativity keeps us all entertained & inspired.😍
— RIAZ K AHMED (@RIAZtheboss) June 21, 2024
May this year be filled with happiness & unforgettable moments just like the films you create.🥳#Jailer2 💥👌🏼 pic.twitter.com/KY9R7dgivK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments