'லியோ' குறித்து ரஜினி பேசியது ஏற்கனவே திட்டமிடப்பட்டதா? இதோ ஒரு விளக்கம்..!

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்ற நிலையில் அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தளபதி விஜய் நடித்த ’லியோ’ படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ’லியோ’ படம் நன்றாக வெற்றியடையும் என்றும் அந்த படம் வெற்றி அடைய நான் ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் ’லியோ’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் பேசியது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும் தளபதி விஜய் தனிப்பட்ட முறையில், ரஜினியின் பிஆர்ஓவிடம் தொடர்பு கொண்டு ’லியோ’ படம் குறித்து ரஜினியை பேச சொன்னதாக ஒரு கருத்து பரவி வருகிறது.

ஆனால் இந்த கருத்துக்கு ரஜினியின் பிஆர்ஓ மறுப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரும் ’லியோ’ குறித்து எந்தவிதமான உரையாடலும் செய்யவில்லை என்றும் இது முழுக்க அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றும் இது போன்ற தகவல்களை யாரும் தயவு செய்து பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே ’லியோ’ குறித்து ரஜினிகாந்த் பேசியது திட்டமிடப்பட்டது அல்ல, தற்செயலானது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

'லியோ' அதிகாலை காட்சி வழக்கு.. நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொன்னது என்ன?

'லியோ' திரைப்படத்தை அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனுவுக்கு அரசு தரப்பிலிருந்து

மாலத்தீவில் பிகினி போட்டோஷூட்.. 'பீஸ்ட்' நாயகியின் வேற லெவல் புகைப்படங்கள்..!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் பிகினி புகைப்பட

வில்லன் நடிகர் மகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை.. திருமண தேதியும் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7: இந்த வார நாமினேஷனில் 11 பேர்.. யார் யார் தெரியுமா? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்ற நிலையில் இன்று நாமினேசன் படலம் முடிவடைந்துள்ள நிலையில் சற்றுமுன் பிக் பாஸ், நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களை அறிவித்துள்ளார். 

இப்ப நான் வந்துட்டேன்.. வச்சு செஞ்சுருவேண்டா ஒவ்வொருத்தனையும்.. வெங்கடேஷின் 'சைந்தவ்' டீசர்..!

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவான 'சைந்தவ் என்ற திரைப்படத்தின் தமிழ் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.