'லியோ' குறித்து ரஜினி பேசியது ஏற்கனவே திட்டமிடப்பட்டதா? இதோ ஒரு விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்ற நிலையில் அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தளபதி விஜய் நடித்த ’லியோ’ படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ’லியோ’ படம் நன்றாக வெற்றியடையும் என்றும் அந்த படம் வெற்றி அடைய நான் ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் ’லியோ’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் பேசியது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும் தளபதி விஜய் தனிப்பட்ட முறையில், ரஜினியின் பிஆர்ஓவிடம் தொடர்பு கொண்டு ’லியோ’ படம் குறித்து ரஜினியை பேச சொன்னதாக ஒரு கருத்து பரவி வருகிறது.
ஆனால் இந்த கருத்துக்கு ரஜினியின் பிஆர்ஓ மறுப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரும் ’லியோ’ குறித்து எந்தவிதமான உரையாடலும் செய்யவில்லை என்றும் இது முழுக்க அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றும் இது போன்ற தகவல்களை யாரும் தயவு செய்து பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே ’லியோ’ குறித்து ரஜினிகாந்த் பேசியது திட்டமிடப்பட்டது அல்ல, தற்செயலானது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
#LEO திரைப்படம் மாபெரும் வெற்றியடைய 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் வாழ்த்து
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 16, 2023
pic.twitter.com/HKLAJd1H1Z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com