வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சற்றுமுன்னர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது:
234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும்
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. அரசியல் மாற்றம் என்பது நடந்தே ஆக வேண்டும். கொடுத்த வாக்கில் இருந்து எப்போதும் தவற மாட்டேன்;’ இவ்வாறு ரஜினிகாந்த் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments