தமிழகத்தில் இன்னும் வெற்றிடம் இருக்கின்றது: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து வருவதாகவும் இந்த முயற்சியில் திருவள்ளுவரும் நானும் மாட்ட மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பேட்டி கொடுத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழகத்தில் சரியான தலைமை இன்னும் இல்லை. தமிழகத்தில் இன்னும் ஒரு ஆளுமையான சரியான இடத்திற்கு வெற்றிடம் இருக்கிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, அனைவரும் அமைதிகாக்க வேண்டும்.
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டாரா? என்பது எனக்கு தெரியாது. ஒரு விஷயத்தை தெரியாமல் பேசக்கூடாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கின்றது. அதன் வளர்ச்சிக்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன். எம்ஜிஆர் எப்படி முதல்வராவதற்கு முன் வரை எப்படி நடித்தாரோ நானும் அதேபோல் நடிப்பேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் தனது இரண்டாவது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments