'அன்றே சொன்னார் ரஜினிகாந்த்' டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்து அதன் பின் திடீரென தன்னுடைய உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் என்னை நம்பி வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேரு நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்றும் ஆனால் அதைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்றும் நான் உண்மையை பேச தயங்கியதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும் அதனை தேர்தல் ஆணையமும் கண்டிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் தான் கொரோனா வைரஸ் இந்த அளவுக்கு வேகமாக பரவி உள்ளது எனவும் சென்னை ஐகோர்ட் இன்று தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

இதையெல்லாம் முன்கூட்டியே யோசித்து தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார் என்று கூறி வரும் ரஜினி ரசிகர்கள் ‘அன்றே சொன்னார் ரஜினிகாந்த் என்ற ஹேஸ்டேக்கை தற்போது டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினியின் நண்பரான தமிழருவி மணியன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் மீண்டெழுந்தவுடன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’ரஜினியின் அரசியல் முடிவு எந்த அளவுக்கு விவேகமானது என்பதை உணர்ந்தேன்’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்

ரஜினி அரசியலுக்கு வருவதை தவிர்த்து அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றியுள்ளார் என்று தற்போது நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்,