'அன்றே சொன்னார் ரஜினிகாந்த்' டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்து அதன் பின் திடீரென தன்னுடைய உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் என்னை நம்பி வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேரு நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்றும் ஆனால் அதைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்றும் நான் உண்மையை பேச தயங்கியதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும் அதனை தேர்தல் ஆணையமும் கண்டிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் தான் கொரோனா வைரஸ் இந்த அளவுக்கு வேகமாக பரவி உள்ளது எனவும் சென்னை ஐகோர்ட் இன்று தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது

இதையெல்லாம் முன்கூட்டியே யோசித்து தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார் என்று கூறி வரும் ரஜினி ரசிகர்கள் ‘அன்றே சொன்னார் ரஜினிகாந்த் என்ற ஹேஸ்டேக்கை தற்போது டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினியின் நண்பரான தமிழருவி மணியன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் மீண்டெழுந்தவுடன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’ரஜினியின் அரசியல் முடிவு எந்த அளவுக்கு விவேகமானது என்பதை உணர்ந்தேன்’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்

ரஜினி அரசியலுக்கு வருவதை தவிர்த்து அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றியுள்ளார் என்று தற்போது நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்,

More News

கமல்-லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

'மாநகரம்' 'கைதி' மற்றும் 'மாஸ்டர்' ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' என்ற படத்தை இயக்க

ஓடிடியில் வெளியாகும் சூப்பர்ஹிட் படத்தின் மூன்றாம் பாகம்!

தமிழில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்றின் மூன்றாம் பாகம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

பூஜா ஹெக்டேவை அடுத்து இன்னொரு விஜய் பட நடிகைக்கு கொரோனா?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று

ஆக்சிஜனை காரணம் காட்டி வேஷமா? ஸ்டெர்லைட் குறித்து கடுமையாக விமர்சிக்கும் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை என்பது தாமிரத்தை உருக்கும் தொழிலுக்காக கடந்த 1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

கேமிரமேனா வேலைக்கு சேர்ந்துடலாம் போல: சாக்சி அகர்வால் புகைப்படத்திற்கு நெட்டிசன் கமெண்ட்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்சி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்படங்களில் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது