வாய்ஸ் மெசேஸ் அனுப்பி சிறுவனை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… எதற்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனுக்கு தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாய்ஸ் மெசேஸ் அனுப்பி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்தச் சிறுவனும் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பொதுவா இருக்கிற விளையாட்டுகளிலே மிகவும் சிக்கலான விளையாட்டாகக் கருதப்படுவது ரூபிஸ் எனப்படும் க்யூப்ஸ் விளையாட்டு. இந்த விளையாட்டில் சிறுவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் அத்வைத் எனும் பள்ளிச் சிறுவன் அந்த க்யூப்ஸ் ரூபிக்களை வைத்து நடிகர் ரஜினிகாந்தின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து உள்ளார். இந்த ஓவியத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அந்தச் சிறுவன் நடிகர் ரஜினிகாந்த்தின் டிவிட்டர் பதிவையும் டேக் செய்துள்ளார். இதையடுத்து சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் சிறுவன் அத்வைத்துக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ரசிகர்கள் மூலமாக இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் உடனே அத்வைதின் தொலைபேசி எண்ணைப் பெற்று வாய்ஸ் மெசேஸ் மூலமாக பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார். அதில் “சூப்பர், சிறப்பான படைப்பு அத்வைத். இறைவன் ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ” என்று வாய்ஸ் மெசஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவன் அத்வைத், சூப்பர் ஸ்டாருக்கு தனது டிவிட்டர் பதிவில் இருந்து நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்லாது இந்திய பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கேரள முதல்வர் பிணராயி விஜயன் போன்றோரின் ஓவியங்களையும் சிறுவன் அத்வைத் ரூபிக்களைக் கொண்டு தத்ரூபமாக வரைந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
@rajinikanth Sir, Thank you so much for your audio message! I consider this as a great blessing from you ?? ! I will cherish this for my entire life. Tones and tones of love to you, thank you Sir?? !
— Advaidh M (@MAdvaidh) April 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments