சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து பாராட்டு பெற்ற படக்குழு இதுதான்!

  • IndiaGlitz, [Thursday,August 18 2016]

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படத்தை பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் கோலிவுட் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வருவதையும், ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருவதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில் 'ஜோக்கர்' படக்குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது.
இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சூப்பர் ஸ்டார் ரஜினி சாரிடம் இருந்து சற்று முன்னர் அழைப்பு வந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் அவர் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்' என்று பதிவு செய்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ், 'ஜோக்கர்' படம் தனக்கு கண்ணீரை வரவழைத்த்தாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதை நேற்றே பார்த்தோம்.
குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைத்துள்ளார். ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ரிலீஸ் தினத்தில் இருந்து இன்று வரை நல்ல வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.