ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் அரசியலுக்கு வருவது குறித்த உறுதியான முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் ரஜினியை பிடிக்காதவர்கள் அவரது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் அரசியலுக்கு வரமாட்டார் என்றே கூறினர். ஆனாலும் ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையோடு தலைவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தெரிவித்துள்ளார். ஜனவரி கட்சி துவக்கம் என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி அறிவிப்பு என்றும் கூறியுள்ளார்.
மேலும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெயர் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அற்புதம் அதிசயம் நிகழும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
எனவே ரஜினி ஏற்கனவே கூறியபடி போர் தொடங்கி விட்டது என்று ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ???? pic.twitter.com/9tqdnIJEml
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments