நான் போகிறேன், வரமாட்டேன்: அரசியலில் இருந்து விலகிய ரஜினியின் ஆலோசகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தனது முடிவை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துவிட்ட நிலையில் அவருடைய அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் அவர்களும் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்‌ கல்லூரிப்‌ பருவத்தில்‌ நான்‌ காமராஜர்‌ காலடியில்‌ என்‌ அரசியல்‌ வாழ்வைத்‌ தொடங்கினேன்‌. ஐம்பதாண்டுகளுக்கு மேல்‌ நீண்ட என்‌ அரசியல்‌ வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால்‌ தமிழகத்தின்‌ அனைத்து மேலான பொதுவாழ்க்கைப்‌ பண்புகளும்‌ பாழடைந்துவிட்டன. அரசியல்‌ ஊழல்‌ மலிந்த சாக்கடையாகச்‌ சரிந்து விட்டது.

சாதி, மதம்‌, இனம்‌, மொழி ஆகியவற்றின்‌ பெயரால்‌ சுய ஆதாயம்‌ தேடும்‌ மலினமான பிழைப்புவாதிகளின்‌ புகலிடமாக அரசியல்‌ களம்‌ மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும்‌, உண்மைக்கும்‌, ஒழுக்கத்துற்கும்‌ எள்ளளவும்‌ மதிப்பில்லை. நான்‌ ஒருபோதும்‌ அறத்திற்குப்‌ புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும்‌ எந்த நிலையிலும்‌ கையேந்‌தியதில்லை.

இன்றும்‌ என்‌ வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான்‌ நடந்து கொண்டிருக்கறது. மக்கள்‌ நலன்‌ சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல்‌ இந்த மண்ணில்‌ மலரவேண்டும்‌; மீண்டும்‌ காமராஜர்‌ ஆட்சியைத்‌ தமிழகம்‌ தரிசிக்க வேண்டும்‌ என்ற என்‌ கனவை நனவாக்கத்‌ தொடர்ந்து முயன்றதுதான்‌ நான்‌ செய்த ஒரே குற்றம்‌.

இதற்காக மலினமான மனநோயாளிகளின்‌ தரம்‌ தாழ்ந்த விமர்சனக்‌ கணைகள்‌ என்மீது வீசப்படுவதால்‌ என்‌ மனைவி, மக்களின்‌ மனங்கள்‌ மிகக்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டுவிட்டன. மாணிக்கத்திற்கும்‌ கூழாங்கற்களுக்கும்‌ பேதம்‌ தெரியாத அரசியல்‌ உலகில்‌ இனி நான்‌ சாதிக்க ஒன்றும்‌ இல்லை. என்‌ நேர்மையும்‌ தூய்மையும்‌ வாழ்வியல்‌ ஒழுக்கமும்‌ போற்றப்படாத அரசியல்‌ களத்திலிருந்து முற்றாக நான்‌ விலகி நிற்பதே விவேகமானது. எந்தக்‌ கைம்மாறும்‌ கருதாமல்‌ சமூக நலனுக்காக என்னுடன்‌ கைகோர்த்து நடந்த காந்திய மக்கள்‌ இயக்க நண்பர்களின்‌ அடி தொழுது நான்‌ விடை பெற்றுக்கொள்கிறேன்‌. இறப்பு என்னைத்‌
தழுவும்‌ இறுதி நாள்‌ வரை நான்‌ அரசியலில்‌ மீண்டும்‌ அடியெடுத்து வைக்கமாட்டேன்‌..

தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன்‌ போய்‌ வருகிறேன்‌ என்றார்‌. நான்‌ போறேன்‌;வரமாட்டேன்‌.

இவ்வாறு தமிழருவி மணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் ரஜினி குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த 'இந்தியன் 2' நாயகி!

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் 'பத்து தல' என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும், இந்தப் படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார்

வெளியே வரும் நிலைமையா? அதிர்ச்சியில் ரம்யா பாண்டியன்

இந்த வாரம் சிங்கிள் எவிக்சனோ அல்லது டபுள் எவிக்சனோ, நீ வெளியே வந்தால் அதற்கு காரணம் நீ கிடையாது என்று ரம்யாவின் சகோதரர் கூறியபோது 'வெளியே வரும் நிலைமை இருக்கின்றதா?

-45 டிகிரி செல்சிஸில் வாழும் மனிதர்கள்? சாட்சிக்கு வெளியாகி இருக்கும் வைரல் புகைப்படம்!!!

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலப் பருவத்தின்போது ரஷ்யாவின் சைபீரியா தலைப்பு செய்திகளில் வந்து விடுகிறது.

உங்களால் தான் தகுதியில்லாதவர்கள் வீட்டில் இருக்கின்றார்கள்: ஆரி ரசிகர்களுக்கு அனிதா பதிலடி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரிக்கு சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் ஆரியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்ட போட்டியாளர்களை

கலைப்புலி எஸ்.தாணுவுக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி: குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் திரையுலகில் நுழைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே