தினம் ஒரு வீடியோ: ரஜினியின் மெகா திட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகி வருவதாகவும், இருப்பினும் அவர் வரும் பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜனவரி வரை ஓய்வு எடுக்கும் ரஜினிகாந்த், பிப்ரவரி முதல் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாகவும் அதற்கு முன்னர் 50 பிரச்சார வீடியோக்களை அவர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயதசமியன்று அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் அன்றைய தினம் ஒரு வீடியோ வெளியாகும் என்றும், அரசியல் கட்சி தொடங்கியவுடன் தினமும் ஒரு வீடியோ என்ற வகையில் 50 வீடியோக்கள் தினசரி சமூக வலைதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ரஜினி இரண்டு வரிகளில் ஒரே ஒரு ட்வீட் போட்டாலே அது சமூக ஊடகங்களில் ஸ்தம்பிக்கும் என்ற நிலையில் அவர் தினமும் ஒரு வீடியோ வெளியிட்டால் சமூக வலைதளங்கள் என்ன ஆகும் என்பதை கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோக்களில் தனது கட்சியின் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள், கடந்த காலத்தில் நடந்த தவறுகள் ஆகியவை குறித்து ரஜினி தனது பாணியில் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments