அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்.. அடுத்த சந்திப்பு முதல்வர் என தகவல்..!

  • IndiaGlitz, [Friday,August 18 2023]

இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களை சந்தித்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக உத்தரப் பிரதேசம் மாநில முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அவர் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார்.

ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபா குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர் சுவாமி தயானந்த சரஸ்வதி உள்ளிட்டவர்களையும் சந்தித்தார். இதனை அடுத்து இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு ஜார்கண்ட் சென்ற ரஜினிகாந்த், அங்கு அம்மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இதனை அடுத்து ராஞ்சியில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கும் சென்றார்.

இந்த நிலையில் தற்போது அவர் உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வரும் வழியில் பாஜக பிரமுகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.