அறவழி போராட்டத்தில் கமல்-ரஜினி: களைகட்டியது வள்ளுவர் கோட்டம்

  • IndiaGlitz, [Sunday,April 08 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடிகர் சங்கம் உள்பட மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் அறவழி போராட்டம் காலை 9 மணி முதல் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கமல், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்பட பல நடிகர்களும், இளையராஜா, வைரமுத்து, எஸ்பி. முத்துராமன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்

இந்த அறவழி போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் கலந்து கொண்டார். அவரை திரையுலக பிரபலங்கள் அனைவரும் வரவேற்றனர். இந்த போராட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்றும், அதுவரை கமல், ரஜினி உள்பட அனைவரும் போராட்டத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது: *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தின் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் அரசு ஒரு தீர்வு காண வேண்டும். இன்று ஒட்டுமொத்த திரையுலகம் கூடியிருப்பது இந்த இரண்டு பிரச்னைகளுக்காகதான். எனவே நாங்க இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் இன்று மெளனப் போராட்டம் நடத்துகிறோம்' என்று கூறியுள்ளார்.

More News

விபிஎஃப் கட்டணம் திடீர் குறைப்பு: முடிவுக்கு வருகிறதா வேலைநிறுத்தம்

டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணத்தை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்

வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்: பிராவோ

நேற்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது.

'காலா' படக்குழுவினர்களின் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம்.

சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது இயக்குனரின் உதவியாளர்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரையுலக வாரீசான சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது

நடிகர் சங்கத்தின் அறப்போராட்டம்: முதல் நபராக மேடையேறிய தளாபதி விஜய்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடிகர் சங்கம் சார்பில் அடையாள அறப்போராட்டம் நடைபெறுகிறது.