கருணாநிதி மறைவுக்கு பின் ரஜினி-ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி சென்னையில் காலமானதை அடுத்து அவரது உடல் மறுநாள் முழு அரசு மரியாதையுடன் சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
மேலும் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்பட ஏராளமான திரையுலகினர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், 'நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும் என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments