ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு விளக்கம்
- IndiaGlitz, [Thursday,October 10 2019]
சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நாளை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களிலும் இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்ய உள்ளனர்
இந்த நிலையில் சீன அதிபருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு விருந்து அளிக்க உள்ளதாகவும் அந்த விருந்தில் முக்கிய தலைவர்கள் அரசியல்வாதிகள் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வந்தது. இந்த விருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது
இந்த நிலையில் தற்போது ரஜினி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீன அதிபருக்கு இந்திய பிரதமர் அளிக்கும் விருந்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி தவறானது என்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அப்படி எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்றும் திமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது