சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறக்க உள்ள நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவரது உருவ படம் திறப்பு விழாவிற்கு ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பள்ளியைத் தத்தெடுத்த வில்லன் நடிகர்… குவியும் வாழ்த்து!

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சுதீப். இவர் தமிழில் கடந்த 2012

முறுக்கு மீசை… வெள்ளைத் தாடியுடன் இயக்குநர் செல்வராகவன்… வைரலாகும் புது கெட்டப்!

பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் முதல் முறையாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்

300 தாலிபான்கள் சுட்டுக்கொலை… ரத்தக்களரியாகும் ஆப்கான்… என்ன காரணம்?

ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கும் அங்குள்ள தாலிபான் அமைப்புகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை கடந்த சில

பிக்பாஸ் லாஸ்லியாவுக்காக சூர்யா செய்யும் உதவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்ட போட்டியாளர்களின் சிலருக்கு தமிழ் திரையுலகிலும் வாய்ப்புகள் பெற்று ஜொலித்து வருகிறார்கள் என்பதும் அந்த வகையில் லாஸ்லியாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் உள்பட 5 மொழிகளில் ஃபர்ஸ்ட் சிங்கிள்: 'புஷ்பா' படக்குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா' திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பது ஏற்கனவே தெரிந்ததே.