ரஜினிகாந்த் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளதாக ரஜினிகாந்த் கூறிய கருத்தை மறுத்த இளையராஜா, என்னை பொறுத்தவரை இசை தான் பிரதானம். அப்படி பார்த்தால் ராமராஜன் படங்களுக்கு அதைவிட நன்றாக இசையமைத்துள்ளதாக கூறினார்.
நேற்று நடைபெற்ற 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியபோது, 'கலைகளில் சிறந்தது இசை தான். நாட்டிய கலை, சிற்ப கலை, போன்றவற்றிற்கு உந்துதல் உணர்ச்சி, உணர்வு போன்று பல காரணங்கள் இருக்கும். ஆனால் இசைக்கு உந்துதல் இசை மட்டும் தான்.
இளையராஜாவின் திறமை கடவுளின் ஆசீர்வாதம், கடவுளுக்கு இயக்கும் சக்தி இருக்கிறது என்பதை நம்பி தான் ஆக வேண்டும். இயற்கை உருவாக்கும் சக்தி, மனிதன் உருவாக்கும் சக்தி என்று இருப்பது போல, சுயம்புவாக உருவாகும் சக்தி இருக்கிறது. அப்படி சுயம்புவாக உருவானவர் தான் இளையராஜா. இசையின் சுயம்பு லிங்கமாக இருக்கிறார் இளையராஜா. அந்த சக்தி ‘அன்னக்கிளி’ மூலம் அறிமுகமாகி இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது
ரமண மகரிஷியை எனக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். ஒரு நாள் அவரை காணும்போது எனக்கு சாமி என்று அழைக்க தோன்றியது. அன்று முதல் நான் அவரை சாமி என்று அழைப்பேன். அதேபோல் அவரும் என்னை சாமி என்று தான் அழைப்பார்.
70, 80களில் பண்டிகை நாட்களில் 12 படங்கள் வெளியாகும். அதில் 10 படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியாகும். ஒரே நாளில் தூக்கமில்லாமல் மூன்று படங்களுக்கு ரீரெக்கார்டிங் செய்திருக்கிறார். அவர் ரீரெக்கார்டிங் செய்தாலே படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமலே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இன்னொரு உண்மையையும் சொல்ல வேண்டும், 70 சதவீத பாடல்களில் பல்லவி இளையராஜாவின் வரிகள் தான். என்னையும் மன்னன் படத்தில் பாட வைத்தார். அப்பாடல் 6 வரி தான், ஆனால் நான் பாடி முடிக்க 6 மணி நேரமானது.
அவர் இசையில் எனக்கு பிடித்த பாடல்கள் நிறைய இருக்கிறது. ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, ‘ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’, ‘ஊரை தெரிஞ்சிகிட்டேன்’, ‘காதலின் தீபம் ஒன்று’, இப்படி நிறைய சொல்லலாம்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout