ரூ.6.50 லட்சம் சொத்து வரி: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு
- IndiaGlitz, [Thursday,October 15 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்டிருந்த சொத்து வரியை குறைக்க வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்
ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரஜினிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு அந்த மனுவையும் தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து இன்று காலை தனது டுவிட்டரில் ’ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்’என்றும் டுவிட் செய்திருந்தார்
இந்த நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரியான ரூ.6.50 லட்சத்தை ரஜினி செலுத்தி விட்டதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளன. நீதிமன்றத்தில் சொத்து வரி தொடர்பான வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் 6.50 லட்சத்தை ரஜினிகாந்த் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னை மாநகராட்சி இன்றுக்குள் சொத்து வரியை செலுத்தி அபராதத்தை தவிர்க்க வேண்டுமென ஏற்கனவே சுற்றறிக்கை விட்டிருந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சொத்து வரியை செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது