close
Choose your channels

க.அன்பழகன் சம்பாதித்தது இரண்டே இரண்டு தான்: ரஜினிகாந்த்

Saturday, March 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுகவின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் பழம்பெரும் அரசியல்வாதியுமான க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் க.அன்பழகன் அவர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த நிலையில் சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க.அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பொது வாழ்வில் சம்பாதித்தது இரண்டே இரண்டு தான். ஒன்று மதிப்பு, இன்னொன்று மரியாதை. அவருடைய இழப்பு நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் என்னுடைய அருமை நண்பர் தளபதியாருக்கும் கழகத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறினார்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment