எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று சென்னையில் காலமானார் அவரது மறைவு தமிழ் எழுத்துலகிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலகுமாரனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய ரஜினிக்கு அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது

இந்த நிலையில் இன்று பாலகுமாரன் மறைவை அடுத்து அவருக்கு ரஜினிகாந்த் நேரில் இறுதியஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் இலக்கியம், ஆன்மீகம் தான் முக்கியம் என்று வாழ்ந்தவர். அவருடைய மரணம் எழுத்துலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்தார்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதோடு அவருடைய ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி படமான 'பாட்ஷா' படத்திற்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கர்நாடகாவில் திடீர் திருப்பம்: ஆட்சி அமைக்கின்றதா காங்கிரஸ்?

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆரம்பத்தில் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தாலும் தற்போது ஆட்சி அமைக்க தேவையான 112 என்ற எண்ணிக்கையில் வெற்றி இல்லை.

பிரகாஷ்ராஜை வம்புக்கு இழுத்த பாஜக பிரமுகர்

கர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

தென்னிந்தியாவில் நுழையும் மணியோசை: அமித்ஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, அக்கட்சி தென்னிந்தியாவில் நுழைவதற்கான மணியோசை போல் உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி ஆரம்பித்து வைத்த புது டெக்னிக்

ஒரு புதிய திரைப்படத்தின் புரமோஷன் என்றால் டீசர், டிரைலர் வெளியிடுவதைத்தான் இதுவரை தமிழ் திரையுலகம் செய்து வருகிறது.

பாஜக வெற்றி குறித்து பிரபல நடிகரின் கருத்து

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றது. அந்த கட்சி கர்நாடகாவில் யாருடைய உதவியும்