'வெந்து தணிந்தது காடு' டிரைலர் ரிலீஸ் விழாவில் ரஜினி இல்லையா? இந்த இரு விஐபி மட்டும் தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன.
முதல்கட்டமாக இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்பதும் இதற்கான பிரமாண்டமான அரங்குகள் தயார் நிலையில் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் பாடல் ரிலீஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வருகை தர இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சற்று முன் இந்த விழாவின் அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இரண்டு விஐபிக்கள் மட்டுமே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Got this super exciting invitation from @VelsFilmIntl for @SilambarasanTR_ @menongautham @arrahman ‘s #VendhuThanindhathuKaadu Audio & Trailer launch event!
— Ramesh Bala (@rameshlaus) August 30, 2022
Also heard many surprises & big promotions are happening around the release. Congratz @shiyamjack for these innovations pic.twitter.com/XhpGpzTWhg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments