எச்.ராஜா, கனிமொழி கேள்விகளை ரஜினிகாந்த் தவிர்ப்பது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், 'குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறினார். இந்த விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்வியை ரஜினிகாந்த் தவிர்த்தார்.
அதேபோல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்துவிட்டு பின்னர் அது அட்மின் போட்ட பதிவு என தப்பித்து கொள்ளும் பாஜகவினர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'எஸ்வி சேகர் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார். உண்மையில் இந்த கேள்வி எச்.ராஜா குறித்தது என்றாலும், ரஜினிகாந்த் எஸ்.வி.சேகர் குறித்து மட்டுமே பதில் கூறியது கவனிக்கத்தக்கது.
மேலும் கனிமொழி குறித்து எச்.ராஜா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்வியையும் ரஜினிகாந்த் தவிர்த்தார். குருமூர்த்தி தனக்கு 25 ஆண்டுகால நண்பர் என்றும் அவரை சந்தித்ததில் எந்தவித ஸ்பெஷலும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்
ரஜினிகாந்த் தனக்கு பின்னால் பாஜகவினர் இல்லை என்றும் ஆண்டவனும் மக்களும் மட்டுமே இருப்பதாக கூறியிருந்தாலும் பாஜகவினர் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளை மட்டும் அவர் புத்திசாலித்தனமாக தவிர்த்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout