எச்.ராஜா, கனிமொழி கேள்விகளை ரஜினிகாந்த் தவிர்ப்பது ஏன்?

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், 'குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறினார். இந்த விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்வியை ரஜினிகாந்த் தவிர்த்தார்.

அதேபோல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்துவிட்டு பின்னர் அது அட்மின் போட்ட பதிவு என தப்பித்து கொள்ளும் பாஜகவினர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'எஸ்வி சேகர் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார். உண்மையில் இந்த கேள்வி எச்.ராஜா குறித்தது என்றாலும், ரஜினிகாந்த் எஸ்.வி.சேகர் குறித்து மட்டுமே பதில் கூறியது கவனிக்கத்தக்கது.

மேலும் கனிமொழி குறித்து எச்.ராஜா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்வியையும் ரஜினிகாந்த் தவிர்த்தார். குருமூர்த்தி தனக்கு 25 ஆண்டுகால நண்பர் என்றும் அவரை சந்தித்ததில் எந்தவித ஸ்பெஷலும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்

ரஜினிகாந்த் தனக்கு பின்னால் பாஜகவினர் இல்லை என்றும் ஆண்டவனும் மக்களும் மட்டுமே இருப்பதாக கூறியிருந்தாலும் பாஜகவினர் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளை மட்டும் அவர் புத்திசாலித்தனமாக தவிர்த்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

More News

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் ஃபார்வேடு செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்மலாதேவி விவகாரம்: ரஜினி கூறிய கருத்து

கடந்த சில நாட்களாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலாதேவியும், ரகசிய பங்களாவும்: பரபரப்பு தகவல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிர்மலாதேவி விவகாரத்தில் தோண்ட தோண்ட புதியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கார்த்தி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு கொண்டாட்டம்

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

விஷால், சமந்தா நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன்