close
Choose your channels

ரஜினியின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

Friday, February 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் நேற்று அவர் சிவராஜ்குமார் நடித்த 'சிவலிங்கா' என்ற படத்தை பார்த்ததாகவும், அதனால் அவர் அந்த படத்தின் தமிழி ரீமேக்கில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தபடம் குறித்த புது தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சித்திக் பிரபல மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். எனவே ரஜினியின் அடுத்தபடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

விஜய் நடித்த 'ப்ரெண்ட்ஸ்', 'காவலன்' ஆகிய படங்களை இயக்கிய சித்திக் இந்த படத்தின் மூலம் ரஜினியை முதன்முதலாக இயக்குவார் என்றும், மலையாள படத்தில் நடித்த நயன்தாராவே தமிழ் ரீமேக்கிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment