அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினி பட வில்லன் நடிகர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரை உலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கனவே அரசியலில் இருந்து வரும் நிலையில் விஜய் உள்பட இன்னும் பல பிரபலங்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மேலும் ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது உறுதி என பேட்டி அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சுமன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகர் சுமன் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு கொடுத்த இவர் கடந்த சில ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுமன் அரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும் விரைவில் அது குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு அரசும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முன் வர வேண்டும் என்றும் விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர் சுமன் விரைவில் பாஜக அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு திரை உலகை சேர்ந்த என்டிஆர் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, பவன் கல்யாண், ரோஜா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் தீவிர அரசியலில் உள்ள நிலையில் தற்போது சுமனும் அரசியலில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com