close
Choose your channels

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை கர்ப்பம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

Friday, October 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கபாலி’ என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே, கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராதிகா ஆப்தே, கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பெனடிக் டைலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், ராதிகா ஆப்தே படங்களில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் மும்பையில் இருப்பதாகவும், அவரது கணவர் இங்கிலாந்தில் இருப்பதாகவும், இருவரும் அவ்வப்போது மட்டுமே சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லண்டனில் நடந்த திரைப்பட விழா ஒன்றில், ராதிகா நடித்த திரைப்படம் திரையிடப்பட்டபோது, இந்த விழாவில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து, அது குறித்த புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ’தோனி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, அதன் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ’வெற்றிச்செல்வன்’, ’கபாலி’, ’சித்திரம் பேசுதடி 2’, ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் இரண்டு ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment