ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் விஜய்க்கு மனைவியாக நடிக்கிறாரா? 'தளபதி 69' அப்டேட்..!

  • IndiaGlitz, [Sunday,September 29 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நடிகை, விஜய்க்கு மனைவியாக 'தளபதி 69' படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69' படத்தை, எச் வினோத் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'தளபதி 69' படத்தில் விஜய்யின் மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மஞ்சு வாரியர் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினியின் மனைவி கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது விஜய்க்கும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர், அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் இணைந்து வருவதால், அவருடைய திரையுலக வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'குட் பேட் அக்லி' படத்தின் வில்லன் இவரா? 'வேதாளம்' படத்தில் மிரட்டினாரே..!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு

'தேவாரா' படம் பார்த்த ரசிகர்கள் தியேட்டரிலேயே மரணம்.. என்ன காரணம்?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்

இந்த அடி அடிக்கிறாங்களே.. என்னடா இது கீர்த்தி சுரேஷுக்கு வந்த சோதனை.. வைரல் வீடியோ..!

கீர்த்தி சுரேஷின் தலையில் ஒரு குழந்தை உட்கார்ந்து, தலையை தபேலாவாக மாற்றி அடிக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, 'பாவம் கீர்த்தி சுரேஷ்'

கமல்ஹாசன் AI படிக்க சென்றது இந்த படத்திற்காகவா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஏஐ டெக்னாலஜி படிக்க சென்றதாக கூறப்படும் நிலையில்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் 'குக் வித் கோமாளி' சீசன் 2 போட்டியாளர்.. களைகட்டும் நிகழ்ச்சி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளது