5ஜி சேவையை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரஜினி பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் 5ஜி சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் வழக்குத் தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 5ஜி சேவை காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் உள்பட பிற உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே இந்த 5ஜி சேவையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் நடிகை ஜூகி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்
ரவிச்சந்திரன் நடித்த ’பருவராகம்’ ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ உள்பட ஒரு சில தமிழ்த் திரைப்படங்களிலும் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் ஜூஹி சாவ்லா. இவர் சமூக செயற்பாட்டாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக ஏற்படும் கதிரியக்கம் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் விலங்குகள் உள்பட அனைத்து உயிர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 4ஜியால் ஏற்படும் கதிரியக்கத்தின் அளவை விட 10 முதல் 100 மடங்கு கதிர் வீச்சை 5ஜி சேவை வெளிப்படுத்தும் என்பதால் மனிதர்கள் மட்டுமின்றி பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதனால் 5ஜி சேவையை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் நடிகை ஜூஹி சாவ்லா பொதுநல வழக்கு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments