திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசரின் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் திருநாவுக்கரசர் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் அவருக்கு புதிய பதவியை விரைவில் காங்கிரஸ் தலைமை அளிக்கவிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசரின் இல்லத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் சந்தித்தார். ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தரியாவின் திருமணத்திற்கு நேரில் சென்று திருநாவுக்கரசுக்கு அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.

ரஜினியும் திருநாவுக்கரசரும் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதும் ரஜினி வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் திருநாவுக்கரசர் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது