கருணாநிதியை அடுத்து ரஜினி சந்தித்த மூத்த அரசியல்வாதி

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த நிகழ்ச்சியில், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார். மிக விரைவில் அவருடைய கட்சியின் பெயர் உள்பட மற்ற விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான திமுக தலைவர் மு.கருணாநிதியை நேற்று சந்தித்து தான் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதை கூறி ஆசி பெற்றார்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த், எம்ஜிஆர் காலத்தில் அரசியலில் இருக்கும் பழுத்த அரசியல்வாதியும், ரஜினியின் 'பாட்ஷா' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்தவருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்களை சந்தித்தார். ரஜினிகாந்த் மதிக்கும் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் அவர்களுடனான இந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் குறித்து ஆலோசனை செய்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது