விருது பெற்றது மகிழ்ச்சி, ஆனால் ரொம்ப வருத்தம்: டெல்லி கிளம்பும் முன் ரஜினி பேட்டி!
- IndiaGlitz, [Sunday,October 24 2021]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விருதைப் பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்று டெல்லி செல்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரை உலகின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த விருது நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் இன்று டெல்லி கிளம்பினார். அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’மிக உயரிய இந்த விருதைப் பெறுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த விருது தனக்கு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த உயரிய விருதை பெறும் நேரத்தில் கே பாலச்சந்தர் அவர்கள் இல்லை என்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் டெல்லி சென்று விருதை வாங்கிவிட்டு சென்னை திரும்பியவுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மகிழ்ச்சி, கே.பி. சார் இல்லாதது வருத்தம். - நடிகர் ரஜினிகாந்த்#Rajinikanth #Rajini #DadasahebPhalkeAward pic.twitter.com/zb1Zg728AR
— Jaya Plus (@jayapluschannel) October 24, 2021