சென்னை கர்ப்பிணி பெண்ணின் ஆசைய நிறைவேற்றிய ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் விருப்பம் இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்து வருகிறது
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜெகதீஸ்வரி பெண் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இவர் தனது கணவர் ராகவாவிடம் தனக்கு குழந்தை பிறக்கும் முன்பாக ரஜினியை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்
இதனையடுத்து கர்ப்பிணி மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரஜினி வீட்டின் முன்பு தினசரி ராகவா காத்திருந்தார். அப்போது எதேச்சையாக ரஜினி அவரை பார்த்து எதற்காக இங்கே காத்திருக்கின்றீர்கள் என்று கேட்டபோது தனது மனைவி கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவர் உங்களை பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்
இதனையடுத்து உடனடியாக அவரது மனைவியை வரச்சொன்ன ரஜினிகாந்த் அவருக்கு தனது கையால் வளையல் அணிவித்து அவருடைய ஆசையை நிறைவேற்றினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout