ரஜினியை சந்தித்த மலேசிய பிரதமர்.. 'சிவாஜி' ஸ்டைலில் நடித்து காட்டிய வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர் சிவாஜி ஸ்டைலில் நடித்துக் காட்டிய காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது
சமீபத்தில் ரஜினிகாந்த் மலேசியா சென்ற நிலையில் அங்கு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசி உள்ளார். இது குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள மலேசியா பிரதமர் அன்வர் ’ஆசிய மற்றும் சர்வதேச உலக அரங்கில் புகழ்பெற்ற ரஜினிகாந்தை இன்று சந்தித்தேன்ம் அவர் திரை உலகில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் இந்த சந்திப்பின்போது ‘சிவாஜி’ படத்தில் வரும் மொட்டை ரஜினி செய்வது போன்று நடித்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகவும் இருவரும் நட்பு ரீதியாக சில விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.
Hari ini saya menerima kunjungan bintang filem India, Rajinikanth yakni satu nama yang tidak asing lagi di pentas dunia seni asia dan antarabangsa.
— Anwar Ibrahim (@anwaribrahim) September 11, 2023
Saya hargai penghormatan yang diberikan beliau terhadap perjuangan saya khasnya terkait isu kesengsaraan dan penderitaan rakyat.… pic.twitter.com/Sj1ChBMuN6
PM @anwaribrahim menerima kunjungan bintang filem tersohor dari India, Rajinikanth yg merupakan sahabat yg menyokong perjuangan melawan kemiskinan dan penderitaan rakyat kecil.
— Rashid Yusoff (@RashidYusoff11) September 11, 2023
PM-X juga berkongsi buku Malaysia MADANI dgn Rajinikanth.
Credit Amir Haziq PMO (video not music). pic.twitter.com/fDk3rjFyZO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments