கருணாநிதியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுவிட்டதோடு, வரும் பொங்கல் திருநாளில் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்களை சந்தித்து வருகிறார்

அந்த வகையில் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த சந்திக்கவுளார். இந்த அவருக்கு மாலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்ட்நடைபெறவுள்ள இந்த சந்திப்பின்போது ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்கள் இருப்பார்கள் என தெரிகிறது

திமுக தலைவர் கருணாநிதியை தனது நெருங்கிய நண்பர் என்று கூறி வரும் ரஜினிகாந்த், அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு பின்னர் மூத்த தலைவர் என்ற முறையில் கருணாநிதியிடம் ஆசிபெறவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.

More News

ஆன்மீக அரசியல் தவறாகவே முடியும்: டிடிவி தினகரன்

ஆன்மீகம் என்பது தனி மனிதனை ஒழுங்குபடுத்தவே; அரசியலில் பயன்படுத்தினால் அது தவறாகத்தான் முடியும்.

தமிழகத்தில் தான் மிகப்பெரிய புரட்சிகள் தொடங்கியுள்ளது: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது:

பலூன் ஹிட் படம்தான். ஆனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. இயக்குனர் சினிஷ்

பலூன் பட வெற்றியால் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.

எம்.எஸ்.பாஸ்கருக்கு சர்ப்ரைஸ் புத்தாண்டு பரிசு கொடுத்த மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

தமிழ் திரையுலகில் டப்பிங் கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய மகள் ஐஸ்வர்யாவும் தற்போது டப்பிங் கலைஞராக உள்ளார்.

பொங்கல் ரேஸில் எத்தனை படங்கள்?

கடந்த 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய்யின் 'பைரவா' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது.