ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த சட்டத்தை ஆதரித்து பேசினார். இந்த சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்றும் அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால், தானே குரல் கொடுக்க போவதாகவும் கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ரஜினி இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மத குருமார்களை சந்திக்க திட்டமிட்டார். இதனை அடுத்து நேற்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் என்பவரை சந்தித்த நிலையில் இன்றும் இஸ்லாமிய பிரமுகர்களை சந்திக்கும் பணி தொடர்கிறது.
சற்று முன்னர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் மதகுருமார்கள் இணைந்து செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com