மஞ்சு வாரியருடன் ரஜினியின் சூப்பர் டான்ஸ்.. 'வேட்டையன்' மனசிலாயோ பாடல் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘வேட்டையன்’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் மற்றும் அனிருத் இணைந்து டான்ஸ் ஆடும் காட்சிகள் இருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தின் மனசிலாயோ என்ற பாடல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை அனிருத், யுகேந்திரன், தீப்தி உள்ளிட்டோர் பாடிய நிலையில் இந்த பாடலில் மலேசியா வாசுதேவன் குரல் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் மலேசியா வாசுதேவன் குரலை கேட்க இந்த பாடல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த பாடலின் சில காட்சிகளில் மஞ்சு வாரியருடன் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடும் காட்சிகள், அதேபோல் ரஜினியுடன் அனிருத் ஆடிய காட்சிகள் இருப்பதை எடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். இந்த பாடலை வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com