அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்: வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்வார் என்றும் அங்கு அவர் உடல் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவருடைய தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் அமெரிக்கா கிளம்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்தும் காரிலிருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் செல்லும் காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இன்று அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு மூன்று மாதங்கள் தங்கி இருந்து உடல் பரிசோதனை செய்துகொள்வார் என்றும் அதன் பின்னர் அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகிய இருவரும் அமெரிக்காவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வந்த ’அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படுவதால் இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
#Thalaivar #Superstar #Rajinikanth leaves to #USA for general #medicalcheckup @RBSIRAJINI pic.twitter.com/Y1dt8SqO26
— Rajinikanth Videos (@rajnivideos) June 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments