'அண்ணாத்த' படப்பிடிப்பு: சன்பிக்சர்ஸ் வெயிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. நேற்றைய ரஜினியின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த சிறுத்தை சிவாவின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த சன் பிக்சர்ஸ், அதில் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கும் அறிவித்திருந்தது என்பதை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் ஹைதராபாத்திற்கு தனி விமானம் மூலம் சென்ற புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ’அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த் என்ற அறிவிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த டுவிட்டில் உள்ள புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
எனவே ’அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்புகள் ஒரே கட்டத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தமாக இந்த படப்பிடிப்பில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
’அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கும் ரஜினி, தேர்தல் பிரச்சாரம் உள்பட அரசியல் பணிகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#SuperstarRajinikanth leaves to Hyderabad for #Annaatthe shoot pic.twitter.com/1YVdhVcIMY
— Sun Pictures (@sunpictures) December 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com