ஸ்ரீதேவிக்காக 37 வருட வழக்கத்தை புறக்கணித்த ரஜினி

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த கோலிவுட் பிரமுகர்களான ரஜினி, கமல், நாசர் உள்பட பலர் மும்பை சென்றுள்ளனர். இன்று ஸ்ரீதேவியின் உடல் மும்பை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இறுதி ஊர்வலத்திலும் கோலிவுட் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இன்று ரஜினி-லதா தம்பதியின் 37வது திருமண நாள் ஆகும். கடந்த 37 வருடங்களாக ஒவ்வொரு திருமண நாளையும் மகள்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி வந்த ரஜினிகாந்த்-லதா தம்பதியினர் தற்போது ஸ்ரீதேவிக்காக மும்பையில் இருப்பதால் இந்த ஆண்டு அவர்கள் திருமண நாளை கொண்டாடுவதை புறக்கணித்துள்ளனர். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் மறைவால் தான் ஒரு நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக ஏற்கனவே ரஜினிகாந்த் மும்பை செல்லும் முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கவுதமியின் சம்பள பாக்கி குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

கவுதமியின் சம்பள பாக்கி குறித்த குற்றசாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் கூறியதாவ்து:

தமிழர்களுக்கு பெருமை தரும் வகையில் அஸ்வினுக்கு கிடைத்த புதிய பதவி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

சிரியா படுகொலையை உச்சு கொட்டுவதால் என்ன பயன்? நடிகர் பிரசன்னாவின் ஆவேச பதிவு

சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் இருந்ததா? பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு துபாயில் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது.

கமல் கட்சியின் கொடி திடீர் மாற்றமா?

சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை ஆரம்பித்த கமல் அறிமுகம் செய்த கட்சியின் கொடி தமிழர் பாசறை கொடியில் உள்ள சின்னத்தை போன்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.