கருணாநிதி மறைவு: குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சற்று முன் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் இறுதியஞ்சலி செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்தார். ரஜினியுடன் அவருடைய மனைவி லதா, மகள் செளந்தர்யா நடிகர் தனுஷ் ஆகியோர்களும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பி சென்றார்.

முன்னதாக ரஜினிகாந்த், கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுர இல்லத்திலும் இறுதியஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கருணாநிதியின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அவருக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்களும் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் வைக்கப்படும் இடங்கள் மற்றும் நேரம் குறித்த தகவல்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு காலமானதை அடுத்து தமிழக மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

காலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் பிரமுகர்களும்,

கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை: தமிழக அரசு அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மீளா சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கருணாநிதி மறைவு: தலைவர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருடைய மறைவால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சோகக்கடலில் மூழ்கியுள்ளது.