தமிழ் சினிமா இருக்கும் வரை மகேந்திரனின் இடம் இருக்கும்: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,April 02 2019]

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமான செய்தி அறிந்தது முதல் தமிழ் திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மகேந்திரனின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை வீட்டுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இயக்குனர் மகேந்திரன் என்னை எனக்கே அடையாளம் காட்டியவர். எனக்கு நடிப்பில் புதிய பரிணாமத்தை கற்று கொடுத்தவர். தமிழ் சினிமா இருக்கும் வரை அவருக்கு என ஒரு இடம் இருக்கும். எனக்கும் அவருக்கு ரொம்ப ஆழமான நட்பு இருந்தது. சமீபத்தில் அவரை சந்தித்து சினிமா, அரசியல் உள்பட பல விஷயங்களை மனம்விட்டு பேசினேன்

முள்ளும் மலரும் படம் பார்த்த பின்னர் கே.பாலசந்தர் என்னிடம் 'உன்னை சினிமாவில் அறிமுகம் செய்ததற்கு பெருமை அடைகிறேன்' என்று கூறினார்.

சினிமாவுக்காகவும், வாழ்க்கைக்காகவும் சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் வாழ்ந்தவர் மகேந்திரன் அவர்கள். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவருடைய குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.