ரஜினியின் அரசியல் சாணக்கியத்தனம் தொடங்கிவிட்டதா?
- IndiaGlitz, [Sunday,June 04 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக விரைவில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் பெரிதும் மதிக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கருணநிதியின் 94வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜெயலலிதா முன்பே 'தான் கருணாநிதியின் நண்பர்' என்று சொல்லும் அளவுக்கு தைரியமும், கருணாநிதியின் மீது மிகுந்த மரியாதையும் வைத்திருந்த ரஜினிகாந்த், கருணாநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று பலருடைய கேள்வியாக உள்ளது.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே கட்சி திமுக தான் என்பதால் இப்போது முதலே திமுகவை தவிர்க்க முயற்சிக்கும் வகையில் வாழ்த்து சொல்லாமல் விட்டாரா? அல்லது 'காலா' படப்பிடிப்பின் பிசியில் மறந்துவிட்டாரா? என்பது ரஜினியின் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
ஆனால் 'காலா' படப்பிடிப்பின் பிசியிலும் கவிகோ அப்துல்ரகுமான் மறைவிற்கு அவர் இரங்கல் தெரிவித்ததில் இருந்து ரஜினியின் அரசியல் சாணாக்கியத்தனம் தொடங்கிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.