சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்: மேலும் சில தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா மற்றும் 2.0 ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். இதில் 'காலா;' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தெதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் கூடிய விரைவில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் தனது அரசியல் கொள்கைகளை குறிக்கும் வகையில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இதே நிறுவனம் ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தை பிரமாண்டமாக தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜின் ''ஜிகர்தண்டா' திரைப்படத்தில் பாபிசிம்ஹா நடித்த கேரக்டர் குறித்து கார்த்திக் சுப்புராஜ் தன்னிடம் கூறியிருந்தால் அந்த கேரக்டரில் நான் நடித்திருப்பேன் என்று ரஜினி ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும், இந்த கேரக்டருக்காக பாபிசிம்ஹா தேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தல அஜித்தின் 'விசுவாசம்' படப்பிடிப்பு எப்போது? வெளிவராத தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை

கஸ்தூரியின் 'மய்யம்' சந்தேகத்தை கமல் தீர்ப்பாரா?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயரில் தொடங்கினார்.

பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்றுதான்: கமல் அரசியல் குறித்து ரஜினிகாந்த்

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நெல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கமலிடம் மேட்டர் பற்றி கேட்ட பா ஜ க பிரமுகர்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் மதுரையில் தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: யாரை சொல்கிறார் ரஜினி

ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் சற்றுமுன் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.